தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சாரதியின் காணொளி வெளிவந்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பேருந்து ஒன்று இன்று பயணித்துக்கொண்டிருந்தது.
பேருந்தை செலுத்திக் கொண்டிந்த வேளையில் சாரதி, தொலைபேசி அழைப்பில் இருந்துள்ளார்.
தொலைபேசியில் உரையாடிய படியே ஒற்றைக் கையால் பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார்.
சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை அவர் இவ்வாறு பேந்தை செலுத்தி சென்றுள்ளார். இதனை அவதானித்த பயணி ஒருவர் சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக் கையால் பேருந்தை செலுத்தியதை காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
குறித்த காணொளி வெளிவந்த நிலையில் சாரதியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். பேருந்தில் சாரதியை நம்பியே மக்கள் பலர் பயணம் செய்கின்றனர்.
நாட்டில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சாரதியின் இந்த செயல் விபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பொறுப்பற்ற நிலையில் ஒற்றைக்கையால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை செலுத்தியுள்ளார் என்று சாரதி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தொலைபேசியில் உரையாடியபடி ஒற்றைக்கையால் சாரத்தியம்; திருந்தாத ஜென்மங்கள் என திட்டித்தீர்க்கும் பொதுமக்கள் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக்கையால் பேருந்தை செலுத்திய சாரதியின் காணொளி வெளிவந்து விமர்சிக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு பேருந்து ஒன்று இன்று பயணித்துக்கொண்டிருந்தது. பேருந்தை செலுத்திக் கொண்டிந்த வேளையில் சாரதி, தொலைபேசி அழைப்பில் இருந்துள்ளார். தொலைபேசியில் உரையாடிய படியே ஒற்றைக் கையால் பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார். சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை அவர் இவ்வாறு பேந்தை செலுத்தி சென்றுள்ளார். இதனை அவதானித்த பயணி ஒருவர் சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஒற்றைக் கையால் பேருந்தை செலுத்தியதை காணொளியாகப் பதிவு செய்துள்ளார். குறித்த காணொளி வெளிவந்த நிலையில் சாரதியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். பேருந்தில் சாரதியை நம்பியே மக்கள் பலர் பயணம் செய்கின்றனர். நாட்டில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சாரதியின் இந்த செயல் விபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பொறுப்பற்ற நிலையில் ஒற்றைக்கையால் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை செலுத்தியுள்ளார் என்று சாரதி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.