11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்துள்ளது.
குறித்த மேன்முறையீட்டு மனுவை காணாமல் போன 11 இளைஞர்களின் பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுவை காணாமல் போன 11 இளைஞர்களின் பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.