• Sep 15 2025

மோட்டார் சைக்கிளில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்தவருக்கு அதிர்ச்சி; திடீரென வெடித்ததில் நடந்த துயரம்

Chithra / Sep 15th 2025, 12:18 pm
image


அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல - ரதனியார பகுதியில்  கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்தபோதே அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. 

கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்தவருக்கு அதிர்ச்சி; திடீரென வெடித்ததில் நடந்த துயரம் அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல - ரதனியார பகுதியில்  கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்தபோதே அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement