• Sep 16 2025

இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில்!

Chithra / Sep 15th 2025, 4:05 pm
image


இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 

சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் செயல்களில் ஈடுபடுவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. 

இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள், சேவையின் வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன. 

பாரம்பரிய விபச்சார விடுதிகள் அல்லது ஸ்பாக்களைப் போலல்லாமல், இந்த இணையத்தள பாலியல் சேவைகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் பெயர் தெரியாத டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி ரகசியமாகச் செயல்படுகின்றன. 

இதனால், குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பொலிஸாருக்கு சவாலாக உள்ளது.

இந்தச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் செயல்களில் ஈடுபடுவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள், சேவையின் வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன. பாரம்பரிய விபச்சார விடுதிகள் அல்லது ஸ்பாக்களைப் போலல்லாமல், இந்த இணையத்தள பாலியல் சேவைகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் பெயர் தெரியாத டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி ரகசியமாகச் செயல்படுகின்றன. இதனால், குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பொலிஸாருக்கு சவாலாக உள்ளது.இந்தச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement