நிலநடுக்கத்தின் போது புதிதாகப் பிறந்த சிசுக்களை தாதியர்கள் இருவர் பாதுகாத்த நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
அசாம் மாநிலத்தில் நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் அசாமின் நாகோன் மருத்துவமனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில் குறித்த மருத்துவமனையைச் சேர்ந்த தாதியர்களும் உயிரிழந்தனர். மருத்துவமனையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு புதிதாகப் பிறந்த சிசுக்கள், விடுதியில் காணப்பட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து விடுதியில் சிசுக்கள் தனியாக உள்ளதையறிந்து தாதியர்கள் இருவர் அங்கு ஓடிச் சென்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பதற்றம் ஒருபுறமிருக்க சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என எண்ணி விடுதிக்குள் இருந்த சிசுக்களை பத்திரமாக இறுகப் பற்றிக்கொண்டனர்.
நிலநடுக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநலமில்லாமல் சிசுக்களை பத்திரமாக பாதுகாத்துள்ளனர்.
பதற்றத்தை ஒதுக்கிவைத்து புத்திசாலித்தனமாக சிசுக்களைப் பாதுகாத்த தாதியர்கள் இருவரின் சேவையையும் நல்லெண்ணத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
தாதியர்கள் ஓடிச் சென்று சிசுக்களைப் பாதுகாத்த காணொளி மருத்துவமனை சிசிரிவி யில் பதிவாகி வெளிவந்து பலரையும் கவர்ந்து வைரலாகி வருகின்றது.
நிலநடுக்கத்தின் போது பிறந்ந சிசுக்களைக் காத்த தாதியர்கள்; சேவைக்கு குவியும் பாராட்டு வைரலாகும் காணொளி நிலநடுக்கத்தின் போது புதிதாகப் பிறந்த சிசுக்களை தாதியர்கள் இருவர் பாதுகாத்த நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. அசாம் மாநிலத்தில் நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது. நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.அசாம் மாநிலத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் அசாமின் நாகோன் மருத்துவமனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் குறித்த மருத்துவமனையைச் சேர்ந்த தாதியர்களும் உயிரிழந்தனர். மருத்துவமனையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு புதிதாகப் பிறந்த சிசுக்கள், விடுதியில் காணப்பட்டனர். நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து விடுதியில் சிசுக்கள் தனியாக உள்ளதையறிந்து தாதியர்கள் இருவர் அங்கு ஓடிச் சென்றனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பதற்றம் ஒருபுறமிருக்க சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என எண்ணி விடுதிக்குள் இருந்த சிசுக்களை பத்திரமாக இறுகப் பற்றிக்கொண்டனர். நிலநடுக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநலமில்லாமல் சிசுக்களை பத்திரமாக பாதுகாத்துள்ளனர். பதற்றத்தை ஒதுக்கிவைத்து புத்திசாலித்தனமாக சிசுக்களைப் பாதுகாத்த தாதியர்கள் இருவரின் சேவையையும் நல்லெண்ணத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர். தாதியர்கள் ஓடிச் சென்று சிசுக்களைப் பாதுகாத்த காணொளி மருத்துவமனை சிசிரிவி யில் பதிவாகி வெளிவந்து பலரையும் கவர்ந்து வைரலாகி வருகின்றது.