திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவனி இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.
பாற்குடப் பவனியானது தங்கபுரம் தங்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
பாற்குடப் பவனியில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இம் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி பாற்குடப் பவனியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவனி; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவனி இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.பாற்குடப் பவனியானது தங்கபுரம் தங்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.பாற்குடப் பவனியில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இம் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி பாற்குடப் பவனியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.