• Sep 16 2025

14 வயதில் எம்மி விருது; இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவென் கூப்பர் சாதனை!

shanuja / Sep 15th 2025, 4:10 pm
image

உலகின் முக்கிய விருதுகளில் ஒனறானா எம்மி விருதை 15 வயதான ஓவென் கூப்பர் இளம் வயதில் வென்று சாதனை படைத்துள்ளார். 


நெட்ஃபிளிக்ஸின் உணர்ச்சி பூர்வமான “Adolescence” (இளமை) தொடரில் தனது அற்புதமான நடிப்பால் 15 வயது ஓவென் கூப்பர், எம்மி விருதைப் பெற்ற இளைய ஆண் நடிகராக சாதனை படைத்துள்ளார். 


இங்கிலாந்தின் வாரிங்டனில் பிறந்த ஓவன்  கூப்பர் தனது 14ஆவது வயதில் ,  நான்கு பகுதிகளாக உருவாக்கப்பட்ட இந்த பிரிட்டிஷ் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 


ஒரு பாடசாலை  மாணவி குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தினை பின்னணியாகக் கொண்டு அடொல்சென் தொடர் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பாக்கப்பட்டது. 


ஜேமி என்ற சந்தேக நபர் பாத்திரத்தில் நடித்த ஓவென் கூப்பரின் நடிப்பு விமர்சகர்களால் “அதிர்ச்சிகரமானது”, “மிகச் சிறந்தது” என்று பாராட்டப்பட்டது. 


ஓவென் 10 வயதில் நடிகராகும் ஆர்வம் கொண்டார். மான்செஸ்டரில் வாரந்தோறும் நடக்கும் நடிப்பு வகுப்புகளில் இரண்டு ஆண்டுகள் கலந்துகொண்டார்.


இந்த தொடருக்கு முன் அவருக்கு தொலைக்காட்சி அனுபவம் இல்லை. இருப்பினும் தனமு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி விருதை வென்று சாதனை படைத்துள்ளார். 


இந்த விருதைப் பெறுவதன் மூலம், 1973 இல்ல் That Certain Summer தொடருக்காக 16 வயதில் எம்மி வென்ற ஸ்காட் ஜாக்கோபியின் சாதனையை  14 வயதான ஓவன் கூப்பர் முறியடித்துள்ளார்.

14 வயதில் எம்மி விருது; இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவென் கூப்பர் சாதனை உலகின் முக்கிய விருதுகளில் ஒனறானா எம்மி விருதை 15 வயதான ஓவென் கூப்பர் இளம் வயதில் வென்று சாதனை படைத்துள்ளார். நெட்ஃபிளிக்ஸின் உணர்ச்சி பூர்வமான “Adolescence” (இளமை) தொடரில் தனது அற்புதமான நடிப்பால் 15 வயது ஓவென் கூப்பர், எம்மி விருதைப் பெற்ற இளைய ஆண் நடிகராக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் வாரிங்டனில் பிறந்த ஓவன்  கூப்பர் தனது 14ஆவது வயதில் ,  நான்கு பகுதிகளாக உருவாக்கப்பட்ட இந்த பிரிட்டிஷ் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஒரு பாடசாலை  மாணவி குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தினை பின்னணியாகக் கொண்டு அடொல்சென் தொடர் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பாக்கப்பட்டது. ஜேமி என்ற சந்தேக நபர் பாத்திரத்தில் நடித்த ஓவென் கூப்பரின் நடிப்பு விமர்சகர்களால் “அதிர்ச்சிகரமானது”, “மிகச் சிறந்தது” என்று பாராட்டப்பட்டது. ஓவென் 10 வயதில் நடிகராகும் ஆர்வம் கொண்டார். மான்செஸ்டரில் வாரந்தோறும் நடக்கும் நடிப்பு வகுப்புகளில் இரண்டு ஆண்டுகள் கலந்துகொண்டார்.இந்த தொடருக்கு முன் அவருக்கு தொலைக்காட்சி அனுபவம் இல்லை. இருப்பினும் தனமு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த விருதைப் பெறுவதன் மூலம், 1973 இல்ல் That Certain Summer தொடருக்காக 16 வயதில் எம்மி வென்ற ஸ்காட் ஜாக்கோபியின் சாதனையை  14 வயதான ஓவன் கூப்பர் முறியடித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement