• Sep 16 2025

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி கிராமமே அழிவடையும் அபாயம்; சுப்பர்மடம் மீனவர்கள் தெரிவிப்பு!

shanuja / Sep 15th 2025, 9:36 pm
image

பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் காணப்படுவதாக என்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


பருத்தித்துறை- சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் இன்று(15) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தனர்.


இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,  

 

1000கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


2018ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாட பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மீண்டும் இந்திய அரசு முனைகிறது.


அருகில் உள்ள மீனவ கிராமங்களுடன் கலந்துரையாடவில்லை, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ் நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம், இத் துறைமுகம் எமக்கு வேண்டாம். அனுர அரசே தேர்தல்களின் போது மீடவர்களின் பக்கமே நாம் இருப்போம், வடக்கு மீனவர்களைப் பாதுகாப்போம் என்று கூறினீர்களே, இப்போ என்னாச்சு? என்றவாறாக கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். 


ஊடக சந்திப்புக்கு முன்னதாக சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் அவர்களையும் பருத்தித்துறை பிரதேச செயலாளரையும் சந்தித்து தமது பிரசினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி கிராமமே அழிவடையும் அபாயம்; சுப்பர்மடம் மீனவர்கள் தெரிவிப்பு பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் காணப்படுவதாக என்று சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை- சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் இன்று(15) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,   1000கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.2018ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாட பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. மீண்டும் இந்திய அரசு முனைகிறது.அருகில் உள்ள மீனவ கிராமங்களுடன் கலந்துரையாடவில்லை, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ் நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம், இத் துறைமுகம் எமக்கு வேண்டாம். அனுர அரசே தேர்தல்களின் போது மீடவர்களின் பக்கமே நாம் இருப்போம், வடக்கு மீனவர்களைப் பாதுகாப்போம் என்று கூறினீர்களே, இப்போ என்னாச்சு என்றவாறாக கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். ஊடக சந்திப்புக்கு முன்னதாக சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் அவர்களையும் பருத்தித்துறை பிரதேச செயலாளரையும் சந்தித்து தமது பிரசினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement