கடந்த ஜனாதிபதி பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் எமது கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் நடைபெற்றதுடன் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கட்சியின் கொள்கைகள் சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தவிர ஏனையோர் தொடர்பில் என்ன செய்வது என்று நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டது.
அத்தகைய அனைவருக்கும் எதிராக தீவிர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும் எனினும் ஒரே சமயத்தில் பலரையும் கட்சியை விட்டு வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை தவிர்த்து தவறிழைத்தோருக்கு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி எனினும் அந்தக் குற்றத்துக்காக அடுத்த இரண்டு வருட காலத்துக்கு அவர்கள் கட்சிக்குள் அவதானிப்பு நிலையில் வைத்திருக்கபடுவார்கள் என்பதை அவர்களுக்கு அறிவிக்குமாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த அவதானிப்பு காலத்தில் அவர்கள் கட்சிக்குள்ளும் கட்சி மூலமும் புதிய பொறுப்பு எதையும் பெற வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. ஒழுக்காற்று நடவடிக்கையின் ஓர் அங்கமாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்ட உறுப்பினர்களில் இன்னும் 12 பேர் பதில் அளிக்கவில்லை எனவும் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் அத்தகைய அறுவர் விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதங்களை ஏற்க மறுத்து அஞ்சல் தரப்பிடம் அவற்றைத் திருப்பி விட்டுள்ளனர் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொதுச் செயலாளரிடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்க மறுத்தமை மிமோசமான விடயம் என்று
கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகையோருக்கும், விளக்கம்அனுப்பத் தவறிய ஏனையோருக்கும் அவர்களிடமிருந்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்கு விடயம் எதுவும் இல்லை என்று கருதப்படுவதாக நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பவும் அதன் பின்னரும் அவர்கள் பதிலளிக்காமல் விட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் அடிப்படையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குக் கட்சிக்குள் புதிய பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படாமல் அவர்களின் நடத்தை அவதானிக்கப்படும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.
கட்சிக்கு விரோதமாக செயற்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த ஜனாதிபதி பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் எமது கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் நடைபெற்றதுடன் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்கட்சியின் கொள்கைகள் சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தவிர ஏனையோர் தொடர்பில் என்ன செய்வது என்று நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டது. அத்தகைய அனைவருக்கும் எதிராக தீவிர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும் எனினும் ஒரே சமயத்தில் பலரையும் கட்சியை விட்டு வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை தவிர்த்து தவறிழைத்தோருக்கு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி எனினும் அந்தக் குற்றத்துக்காக அடுத்த இரண்டு வருட காலத்துக்கு அவர்கள் கட்சிக்குள் அவதானிப்பு நிலையில் வைத்திருக்கபடுவார்கள் என்பதை அவர்களுக்கு அறிவிக்குமாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த அவதானிப்பு காலத்தில் அவர்கள் கட்சிக்குள்ளும் கட்சி மூலமும் புதிய பொறுப்பு எதையும் பெற வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. ஒழுக்காற்று நடவடிக்கையின் ஓர் அங்கமாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்ட உறுப்பினர்களில் இன்னும் 12 பேர் பதில் அளிக்கவில்லை எனவும் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் அத்தகைய அறுவர் விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதங்களை ஏற்க மறுத்து அஞ்சல் தரப்பிடம் அவற்றைத் திருப்பி விட்டுள்ளனர் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொதுச் செயலாளரிடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்க மறுத்தமை மிமோசமான விடயம் என்றுகூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகையோருக்கும், விளக்கம்அனுப்பத் தவறிய ஏனையோருக்கும் அவர்களிடமிருந்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதற்கு விடயம் எதுவும் இல்லை என்று கருதப்படுவதாக நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பவும் அதன் பின்னரும் அவர்கள் பதிலளிக்காமல் விட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குக் கட்சிக்குள் புதிய பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படாமல் அவர்களின் நடத்தை அவதானிக்கப்படும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.