• Sep 16 2025

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய கார் சாரதி; பரிதாபமாக பலியாகிய இளம் யுவதி - அக்கரைப்பற்றில் சம்பவம்!

shanuja / Sep 15th 2025, 9:41 pm
image

காரொன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம் அக்கரைப்பற்று - பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 


அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்தையடுத்து காரை செலுத்திச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 


விபத்தில் மோட்டார் சைக்கிள்  சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அக்கரைப்பற்று பகுதியைச்  சேர்ந்த 24 வயதான அர்ச்சனா என்ற  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி ஓடிய கார் சாரதி; பரிதாபமாக பலியாகிய இளம் யுவதி - அக்கரைப்பற்றில் சம்பவம் காரொன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் அக்கரைப்பற்று - பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தையடுத்து காரை செலுத்திச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிள்  சாரதி மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று பகுதியைச்  சேர்ந்த 24 வயதான அர்ச்சனா என்ற  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement