மட்டக்களப்பு - குருக்கள் மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
குருக்கள் மடம் பழைய பாடசாலைக்கு வருகை தந்து , அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிறுவர்களும் , பெரியவர்களும் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு செல்வதில்லை என்று மக்களால் தவிசாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த பகுதிக்கு உடனடி களவிஜயம் ஒன்றினை இன்று (15) மேற்கொண்டார்.
களவிஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குருக்கள் மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்; தென்எருவில் பற்று தவிசாளர் தெரிவிப்பு மட்டக்களப்பு - குருக்கள் மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். குருக்கள் மடம் பழைய பாடசாலைக்கு வருகை தந்து , அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிறுவர்களும் , பெரியவர்களும் அங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு செல்வதில்லை என்று மக்களால் தவிசாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த பகுதிக்கு உடனடி களவிஜயம் ஒன்றினை இன்று (15) மேற்கொண்டார். களவிஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.