• Dec 17 2025

தம்பலகாமம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் நிறைவு!

dileesiya / Dec 16th 2025, 12:53 pm
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம்  இன்று (16) தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபா மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.


இதில் 11 வாக்குகளால் வரவுசெலவு திட்டம்  நிறைவேறியது.


வாக்கெடுப்பில்  நடு நிலையாக ஜந்து பேரும் ஆதரவாக பதினொரு பேரும்  வாக்களித்தனர்.


தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த இருவரும் நடுநிலை வகித்தனர்.


தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவரே தவிசாளராக செயற்பட்டு வரும் நிலையில் தற்போதைய வரவுசெலவுதிட்டத்தின் படி ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தவிசாளர் உட்பட மூவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த இருவரும், இலங்கை தமிழரசு கட்சி இருவரும்,தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சி ஒருவரும்,பொதுஜன பெரமுன ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிஒருவரும் என மொத்தமாக பதினொரு உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.



தம்பலகாமம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் நிறைவு திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம்  இன்று (16) தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபா மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.இதில் 11 வாக்குகளால் வரவுசெலவு திட்டம்  நிறைவேறியது.வாக்கெடுப்பில்  நடு நிலையாக ஜந்து பேரும் ஆதரவாக பதினொரு பேரும்  வாக்களித்தனர்.தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த இருவரும் நடுநிலை வகித்தனர்.தற்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவரே தவிசாளராக செயற்பட்டு வரும் நிலையில் தற்போதைய வரவுசெலவுதிட்டத்தின் படி ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தவிசாளர் உட்பட மூவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த இருவரும், இலங்கை தமிழரசு கட்சி இருவரும்,தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சி ஒருவரும்,பொதுஜன பெரமுன ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிஒருவரும் என மொத்தமாக பதினொரு உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement