• Dec 17 2025

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

Chithra / Dec 16th 2025, 12:47 pm
image

அளுத்கம - மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி  உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 


வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


அளுத்கம - மத்துகம வீதியில் லபுவெல்கொட சந்தியில் நேற்று இரவு, போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று குறித்த வீதியில் வேகமாக பயணித்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். 


இதன்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத மோட்டார் சைக்கிள்  போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் அருகிலுள்ள வடிகாலுக்குள் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். 


பலத்த காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் அளுத்கம தர்கா நகர வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி அளுத்கம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


மேலும் இந்த விபத்து தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு அளுத்கம - மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி  உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அளுத்கம - மத்துகம வீதியில் லபுவெல்கொட சந்தியில் நேற்று இரவு, போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று குறித்த வீதியில் வேகமாக பயணித்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத மோட்டார் சைக்கிள்  போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் அருகிலுள்ள வடிகாலுக்குள் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். பலத்த காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் அளுத்கம தர்கா நகர வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி அளுத்கம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement