நாட்டில் இடம்பெற்ற புயல் மற்றும் மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் புகையிரதங்களை இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் என ரயில்வே வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவிக்கிறனர்.
இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் நாட்டில் ஏனைய இடங்களில் பாலங்கள் மற்றும் வீதிகள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் வீதிகளை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நானுஓயா , ஹட்டன் ரயில் நிலையத்தில் உள்ள புகையிரத வீதி பராமரிப்பு பிரிவின் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மலைய புகையிரத சேவையின் பாதைகள், பாலங்கள், புகையிரத நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.
இதில் கொட்டகலை, கிரேட் வெஸ்டர்ன், நானுஓயா, பெரக்கும்புர மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு அருகில் உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ள இடங்களில் 50 முதல் 100 மீட்டருக்கு இடைக்கிடையே வீதியில் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கல் போன்றவை ஏற்பட்டுள்ளது.
இதனால் முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடியவாறு புனரைமைப்பதற்கு சற்று காலம் செல்லும் என தெரிவிக்கின்றன.
குறிப்பாக கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த இடத்தை நிரப்பவோ அல்லது புதிய இடத்திலிருந்து ரயில் பாதையை புதுபிக்கவே முடியாது என்றும், தற்போதைய சூழ்நிலையில் கொட்டகலையிலிருந்து நானுஓயா வரையிலான ரயில் பாதையை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் மண்சரிவு காரணமாக ரயில் பாதை ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மலையக ரயில் மார்க்கத்திற்கு பெருமளவு பாதிப்பு - ரயில் இயக்குவது கடினம் நாட்டில் இடம்பெற்ற புயல் மற்றும் மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் புகையிரதங்களை இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் என ரயில்வே வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவிக்கிறனர்.இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் நாட்டில் ஏனைய இடங்களில் பாலங்கள் மற்றும் வீதிகள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.தற்போது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் வீதிகளை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நானுஓயா , ஹட்டன் ரயில் நிலையத்தில் உள்ள புகையிரத வீதி பராமரிப்பு பிரிவின் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மலைய புகையிரத சேவையின் பாதைகள், பாலங்கள், புகையிரத நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.இதில் கொட்டகலை, கிரேட் வெஸ்டர்ன், நானுஓயா, பெரக்கும்புர மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு அருகில் உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ள இடங்களில் 50 முதல் 100 மீட்டருக்கு இடைக்கிடையே வீதியில் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கல் போன்றவை ஏற்பட்டுள்ளது.இதனால் முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடியவாறு புனரைமைப்பதற்கு சற்று காலம் செல்லும் என தெரிவிக்கின்றன.குறிப்பாக கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த இடத்தை நிரப்பவோ அல்லது புதிய இடத்திலிருந்து ரயில் பாதையை புதுபிக்கவே முடியாது என்றும், தற்போதைய சூழ்நிலையில் கொட்டகலையிலிருந்து நானுஓயா வரையிலான ரயில் பாதையை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் மண்சரிவு காரணமாக ரயில் பாதை ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது.