அபுதாபியில் இன்று (16) நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
அவர் 4 கோடி இந்திய ரூபாய்க்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரராக பெதும் நிஸ்ஸங்க திகழ்கிறார்.
இவரது சிறப்பான துடுப்பாட்டத் திறமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரைத் தமது அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதற்காக இணைத்துக்கொண்டுள்ளது.
இதேவேளை, இன்று நடைபெற்ற ஏலத்தில் இலங்கை வீரர்களான மதீஷ பத்திரன 18 கோடி ரூபாவுக்கு KKR அணியாலும் மற்றும் வனிந்து ஹசரங்க 2 கோடி ரூபாவுக்கு LSG அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெதும் நிஸ்ஸங்கவை 4 கோடிக்கு வாங்கிய DC அபுதாபியில் இன்று (16) நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அவர் 4 கோடி இந்திய ரூபாய்க்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரராக பெதும் நிஸ்ஸங்க திகழ்கிறார். இவரது சிறப்பான துடுப்பாட்டத் திறமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரைத் தமது அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதற்காக இணைத்துக்கொண்டுள்ளது. இதேவேளை, இன்று நடைபெற்ற ஏலத்தில் இலங்கை வீரர்களான மதீஷ பத்திரன 18 கோடி ரூபாவுக்கு KKR அணியாலும் மற்றும் வனிந்து ஹசரங்க 2 கோடி ரூபாவுக்கு LSG அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.