2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு விழா இன்றைய தினம் (16) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் நடாத்தப்படும் குறித்த விழாவில் பிரதம விருந்தினர்களாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்தோடு விழாவின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த விழாவானது பண்பாட்டு விழாவாகவும் பாரம்பரிய கண்காட்சியாகவும் அமைந்திருந்ததுடன் மூத்த கலைஞரும் எழுத்தாளருமான அரியான் பொய்கை செல்லத்துரை அவர்களின் நினைவரங்காக விழா அரங்கு அமைந்திருந்தது.
விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பமாகிய விழாவில் விருந்தினர்கள் பாரம்பரிய கண்காட்சியினைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கலை நிகழ்வுகள், மூத்த மற்றும் இளங்கலைஞர்கள் விருது வழங்கிக் கௌரவித்தல், சிறந்த நூலாசிரியர்கள் கௌரவிப்பு முதலானவை இடம்பெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் வெளியிடப்பட்ட 'வடந்தை' நூல்வெளியீடும் இடம்பெற்றது.
குறித்த விழாவில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்.
புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழா - 2025 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு விழா இன்றைய தினம் (16) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் நடாத்தப்படும் குறித்த விழாவில் பிரதம விருந்தினர்களாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்தோடு விழாவின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். குறித்த விழாவானது பண்பாட்டு விழாவாகவும் பாரம்பரிய கண்காட்சியாகவும் அமைந்திருந்ததுடன் மூத்த கலைஞரும் எழுத்தாளருமான அரியான் பொய்கை செல்லத்துரை அவர்களின் நினைவரங்காக விழா அரங்கு அமைந்திருந்தது. விருந்தினர்கள் வரவேற்புடன் ஆரம்பமாகிய விழாவில் விருந்தினர்கள் பாரம்பரிய கண்காட்சியினைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கலை நிகழ்வுகள், மூத்த மற்றும் இளங்கலைஞர்கள் விருது வழங்கிக் கௌரவித்தல், சிறந்த நூலாசிரியர்கள் கௌரவிப்பு முதலானவை இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் வெளியிடப்பட்ட 'வடந்தை' நூல்வெளியீடும் இடம்பெற்றது.குறித்த விழாவில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்.