மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதகாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (16) குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர்.
கையால் எழுதிய குறித்த அறிக்கையை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி
சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை; நீதிமன்று வழங்கிய முக்கிய உத்தரவு மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதகாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று (16) குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர்.கையால் எழுதிய குறித்த அறிக்கையை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிசமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.