விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் இன்று உழவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.
கமநல சேவைகள் நிலைய பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலியுகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை தென் மேற்கு பிரதேசசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன்,கமக்காரர் அமைப்புகளின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரசபையின் தலைவர் எஸ்.சந்திரமோகன் உட்பட பலர் கலந்துகெர்ணடனர்.
இதன்போது உழவர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் எருதுடன் விவசாயிகள் உழவு செய்யும் கலப்பையுடன் கூடிய உழவரின் உருவச்சிலை இதன்போது திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது உழவர் சிலையாக இந்த உழவர் சிலை அமைந்துள்ளதுடன் இதற்கான உதவியினை கொக்கட்டிச்சோலை கமநல சேவைகள் குழுவி;ன் தலைவர் ஓய்வுபெற்ற தபால் அதிபர் ம.கோபாலரட்னம் வழங்கியுள்ளதுடன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உழவர் சிலை திறந்து வைப்பு விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் இன்று உழவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.கமநல சேவைகள் நிலைய பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலியுகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் கலந்துகொண்டார்.நிகழ்வின் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை தென் மேற்கு பிரதேசசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன்,கமக்காரர் அமைப்புகளின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரசபையின் தலைவர் எஸ்.சந்திரமோகன் உட்பட பலர் கலந்துகெர்ணடனர்.இதன்போது உழவர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் எருதுடன் விவசாயிகள் உழவு செய்யும் கலப்பையுடன் கூடிய உழவரின் உருவச்சிலை இதன்போது திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது உழவர் சிலையாக இந்த உழவர் சிலை அமைந்துள்ளதுடன் இதற்கான உதவியினை கொக்கட்டிச்சோலை கமநல சேவைகள் குழுவி;ன் தலைவர் ஓய்வுபெற்ற தபால் அதிபர் ம.கோபாலரட்னம் வழங்கியுள்ளதுடன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.