• Dec 17 2025

கூமடுகண்டல் பகுதியை மேற்பார்வை செய்த ரவிகரன் எம்.பி

dorin / Dec 16th 2025, 8:58 pm
image

கூமடுகண்டலில் தமிழர்களின் நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி  நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ரவிகரன் எம்.பி பார்வையிட்டுள்ளார் 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாயநிலமான கூமடுகண்டல்பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனும், கமநலசேவைநிலைய உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடி நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களது பூர்வீக விவசாயநிலமான கொக்குத்தொடுவாய் - கூமடுகண்டல் பகுதிக்கு அருகில் மகாவலி அதிகாரசபையினால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவித்து தமிழ்மக்களால் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்செய்கையை ஊடறுத்து மகாவலி அதிகாரசபையினர் யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக கொக்குத்தொடுவாய் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களால் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள அவர்களது பூர்வீக விவசாயக் காணிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே, இவ்வாறாக மகாவலி அதிகாரசபை அடாவடித்தனமான முறையில் தமது நெற்செய்கையை ஊடறுத்து யானைவேலி அமைத்துவருவதாகவும் கொக்குத்தொடுவாய் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டினைத்தொடர்ந்து கொக்குத்தொடுவாய்ப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், விவசாயிகள் மற்றும் கமநலசேவைநிலைய உத்தியோகத்தர்களிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு இவ்விடம்தொடர்பில் உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி மகாவலி அதிகாரசபையின் இத்தகைய அத்துமீறல் செயற்பாட்டுக்கெதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்தும் தம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவில் 2000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோட்டக்கேணி தொடக்கம் எரிஞ்சகாடுவரையான விவசாய பாதை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது கடுமையான முயற்சியால் அடுத்த வருடம் குறித்த வீதியைச் சீரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை அறுவடையை எடுத்து வருவதற்கு தற்காலிக சீரமைப்பு ஏற்பாட்டைச் செய்துதருமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூமடுகண்டல் பகுதியை மேற்பார்வை செய்த ரவிகரன் எம்.பி கூமடுகண்டலில் தமிழர்களின் நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி  நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ரவிகரன் எம்.பி பார்வையிட்டுள்ளார் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாயநிலமான கூமடுகண்டல்பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனும், கமநலசேவைநிலைய உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடி நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,தமிழர்களது பூர்வீக விவசாயநிலமான கொக்குத்தொடுவாய் - கூமடுகண்டல் பகுதிக்கு அருகில் மகாவலி அதிகாரசபையினால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவித்து தமிழ்மக்களால் செய்கைபண்ணப்பட்டுள்ள நெற்செய்கையை ஊடறுத்து மகாவலி அதிகாரசபையினர் யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக கொக்குத்தொடுவாய் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.குறிப்பாக தமிழ் மக்களால் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள அவர்களது பூர்வீக விவசாயக் காணிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே, இவ்வாறாக மகாவலி அதிகாரசபை அடாவடித்தனமான முறையில் தமது நெற்செய்கையை ஊடறுத்து யானைவேலி அமைத்துவருவதாகவும் கொக்குத்தொடுவாய் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டினைத்தொடர்ந்து கொக்குத்தொடுவாய்ப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், விவசாயிகள் மற்றும் கமநலசேவைநிலைய உத்தியோகத்தர்களிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.அத்தோடு இவ்விடம்தொடர்பில் உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி மகாவலி அதிகாரசபையின் இத்தகைய அத்துமீறல் செயற்பாட்டுக்கெதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்தும் தம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.அதேவேளை கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவில் 2000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோட்டக்கேணி தொடக்கம் எரிஞ்சகாடுவரையான விவசாய பாதை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இந்நிலையில் அவர்களது கடுமையான முயற்சியால் அடுத்த வருடம் குறித்த வீதியைச் சீரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.இருப்பினும் தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை அறுவடையை எடுத்து வருவதற்கு தற்காலிக சீரமைப்பு ஏற்பாட்டைச் செய்துதருமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement