அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியின் துப்பாக்கியை துணிச்சலுடன் பறித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபரை, அவுஸ்திரேலிய பிரதமர் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்றுமுன்தினம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
அதன்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடம் சென்று துணிச்சலுடன் ஒருவர் துப்பாக்கியைப் பறித்துள்ளார்.
43 வயதான அகமது அல் அகமது என்ற நபரே இவ்வாறு துணிச்சலுடன் சென்று துப்பாக்கியைப் பறித்துள்ளார்.
குறித்த நபர், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடி அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்தார்.
தனிநபராக துணிச்சலுடன் சென்று துப்பாக்கியைப் பறித்த குறித்த நபரின் காணொளி வைரலாகி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
எனினும் துப்பாக்கியைப் பறித்த போது அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அகமதுவை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சந்தித்தார்.
அவரின் நிலை தொடர்பில் கேட்டறிந்து துணிச்சலுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்து ஆறுதல் அளித்துள்ளார்.
சிட்னி துப்பாக்கிதாரியை துணிவாக பிடித்து காயப்பட்ட நபரை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த பிரதமர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியின் துப்பாக்கியை துணிச்சலுடன் பறித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபரை, அவுஸ்திரேலிய பிரதமர் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்றுமுன்தினம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. அதன்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடம் சென்று துணிச்சலுடன் ஒருவர் துப்பாக்கியைப் பறித்துள்ளார். 43 வயதான அகமது அல் அகமது என்ற நபரே இவ்வாறு துணிச்சலுடன் சென்று துப்பாக்கியைப் பறித்துள்ளார்.குறித்த நபர், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடி அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்தார்.தனிநபராக துணிச்சலுடன் சென்று துப்பாக்கியைப் பறித்த குறித்த நபரின் காணொளி வைரலாகி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. எனினும் துப்பாக்கியைப் பறித்த போது அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அகமதுவை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சந்தித்தார்.அவரின் நிலை தொடர்பில் கேட்டறிந்து துணிச்சலுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்து ஆறுதல் அளித்துள்ளார்.