• Dec 17 2025

புகை மூட்டத்தால் சூழ்ந்த டெல்லி;திடீர் என மாற்றப்பட்ட கல்வி நடைமுறை!

dileesiya / Dec 16th 2025, 12:42 pm
image

டெல்லியில் காற்று மாசு நிலை தொடர்ந்து கடுமையாக நீடித்து வருவதால், பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரித்துள்ளது. 


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள பாடசாலை  கற்றல் முறை மாற்றப்பட்டுள்ளது.


மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஆபத்தான காற்று மாசின் நேரடி தாக்கத்தை குறைப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.


மாற்றப்பட்ட முறையின் கீழ், சில வகுப்புகள் நேரடியாக பாடசாலைகளில் நடைபெறும் நிலையில், ஏனைய  வகுப்புகள்  இணைய வழியாக நடத்தப்படும்.


தற்போது நிலவும் காற்று மாசு சூழ்நிலையால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார  அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


புகை மூட்டத்தால் சூழ்ந்த டெல்லி;திடீர் என மாற்றப்பட்ட கல்வி நடைமுறை டெல்லியில் காற்று மாசு நிலை தொடர்ந்து கடுமையாக நீடித்து வருவதால், பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள பாடசாலை  கற்றல் முறை மாற்றப்பட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஆபத்தான காற்று மாசின் நேரடி தாக்கத்தை குறைப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.மாற்றப்பட்ட முறையின் கீழ், சில வகுப்புகள் நேரடியாக பாடசாலைகளில் நடைபெறும் நிலையில், ஏனைய  வகுப்புகள்  இணைய வழியாக நடத்தப்படும்.தற்போது நிலவும் காற்று மாசு சூழ்நிலையால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார  அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement