அத்துருகிரிய - கஜபா மாவத்தை பகுதியில், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வாதுவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவாகியிருந்துள்ளார்.
அதன்படி பண மோசடிகள் தொடர்பாக, மொரட்டுவை, காலி, வரக்காப்பொல மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்றங்களால், குறித்த சந்தேகநபருக்கு எதிராக 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி; 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அதிரடிக் கைது அத்துருகிரிய - கஜபா மாவத்தை பகுதியில், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபர் வாதுவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.குறித்த சந்தேகநபர், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவாகியிருந்துள்ளார். அதன்படி பண மோசடிகள் தொடர்பாக, மொரட்டுவை, காலி, வரக்காப்பொல மற்றும் பாணந்துறை ஆகிய நீதிமன்றங்களால், குறித்த சந்தேகநபருக்கு எதிராக 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.