பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் பத்ராசலம் அருகேயுள்ள மலைப்பாதையில் இன்று இடம்பெற்றுள்ளது.
பத்ராசலம் அருகே 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து பயணித்துள்ளது. குறித்த 35 பயணிகளும் ஆன்மீக சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காகப் பயணித்துள்ளனர்.
இதன்போது பத்ராசாலம் மலைப்பாதை அருகே பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணித்தவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படடுகின்றது.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பாதை அருகே பயணித்த வேளையில் மூடுபனி காரணமாக சாரதி கட்டுப்பாட்டையிழந்ததால் விபத்து சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆந்திர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மலைப்பாதை அருகே கவிழ்ந்த பேருந்து; 9 பேர் உயிரிழப்பு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் பத்ராசலம் அருகேயுள்ள மலைப்பாதையில் இன்று இடம்பெற்றுள்ளது. பத்ராசலம் அருகே 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து பயணித்துள்ளது. குறித்த 35 பயணிகளும் ஆன்மீக சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காகப் பயணித்துள்ளனர். இதன்போது பத்ராசாலம் மலைப்பாதை அருகே பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணித்தவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படடுகின்றது.மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலைப்பாதை அருகே பயணித்த வேளையில் மூடுபனி காரணமாக சாரதி கட்டுப்பாட்டையிழந்ததால் விபத்து சம்பவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆந்திர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.