• Dec 12 2025

மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

Chithra / Dec 12th 2025, 1:42 pm
image

 

இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது.


மகாவலி ஆற்றிலிருந்து அதிகப்படியான நீரை இலங்கையின் வறண்ட வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், விவசாயத் துறையின் மீள்தன்மையை வலுப்படுத்துவதன் மூலமும், 

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும் வடமத்திய மாகாணத்தில் 35,600க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.


இந்தத் திட்டத்திற்கான கூட்டு இணை நிதியளிப்பு முயற்சியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழிநடத்துகிறது.


மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்  இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது.மகாவலி ஆற்றிலிருந்து அதிகப்படியான நீரை இலங்கையின் வறண்ட வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், விவசாயத் துறையின் மீள்தன்மையை வலுப்படுத்துவதன் மூலமும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும் வடமத்திய மாகாணத்தில் 35,600க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.இந்தத் திட்டத்திற்கான கூட்டு இணை நிதியளிப்பு முயற்சியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழிநடத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement