• Dec 12 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடி செய்யும் கும்பல்

Chithra / Dec 12th 2025, 2:43 pm
image


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் இதனை தெரிவித்தார். 

 

மேலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.


அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடி செய்யும் கும்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் இதனை தெரிவித்தார்.  மேலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement