• Jan 19 2026

வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவு !

dileesiya / Dec 12th 2025, 3:44 pm
image

வெருகல் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12 ) நடைபெற்ற சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

பிரதேச சபையின் தவிசாளர் சேனுராமன் கருணாநிதியினால் இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும்ஐக்கிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும்

தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

இன்றைய சபை அமர்வில் மொத்தமாக 12 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்களிப்பின் போது, தேசிய மக்கள் சக்தி  2 உறுப்பினர்களும்,  ஐக்கிய மக்கள் சக்தி  2 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக் கட்சி  1 உறுப்பினருமாக ஐந்து உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இதையடுத்து, வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து ஏழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

இந்த ஏழு உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நடுநிலை வகித்த உறுப்பினர்களைத் தவிர, மிகுதி ஏழு உறுப்பினர்களின் மேலதீக வாக்குகளின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.  

வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவு வெருகல் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12 ) நடைபெற்ற சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.பிரதேச சபையின் தவிசாளர் சேனுராமன் கருணாநிதியினால் இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி 8 உறுப்பினர்களையும்ஐக்கிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும்தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.இன்றைய சபை அமர்வில் மொத்தமாக 12 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்களிப்பின் போது, தேசிய மக்கள் சக்தி  2 உறுப்பினர்களும்,  ஐக்கிய மக்கள் சக்தி  2 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக் கட்சி  1 உறுப்பினருமாக ஐந்து உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.இதையடுத்து, வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து ஏழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த ஏழு உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.நடுநிலை வகித்த உறுப்பினர்களைத் தவிர, மிகுதி ஏழு உறுப்பினர்களின் மேலதீக வாக்குகளின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement