• Dec 12 2025

ஆளுங்கட்சி எம்.பி அசோக ரன்வல அதிரடிக் கைது; விபத்தின்போது மது அருந்தியிருந்தாரா?

Chithra / Dec 12th 2025, 2:31 pm
image

முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். 


ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சப்புகஸ்கந்த - டெனிமுல்ல பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. 


அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி, மற்றொரு  காருடன் நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து நிகழ்ந்தது.


விபத்தில் காரில் பயணித்த 25 வயது பெண், அவரது ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய மற்றுமோர் பெண் ஆகியோர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.


விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


இந்நிலையில் சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


மேலும், இந்த விபத்தின் போது சாரதிகள் மதுபோதையில் இருந்தனரா? என்பதைப் பரிசோதிப்பதற்காக வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவின் அடிப்படையில் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர்  இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி எம்.பி அசோக ரன்வல அதிரடிக் கைது; விபத்தின்போது மது அருந்தியிருந்தாரா முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சப்புகஸ்கந்த - டெனிமுல்ல பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி, மற்றொரு  காருடன் நேருக்கு நேர் மோதி  இந்த விபத்து நிகழ்ந்தது.விபத்தில் காரில் பயணித்த 25 வயது பெண், அவரது ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய மற்றுமோர் பெண் ஆகியோர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.மேலும், இந்த விபத்தின் போது சாரதிகள் மதுபோதையில் இருந்தனரா என்பதைப் பரிசோதிப்பதற்காக வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவின் அடிப்படையில் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர்  இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement