கண்டி, கேகாலை குருநாகல், மாத்தளை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் இந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளில் நேற்று மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது குறித்து மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
குறித்த பகுதிகளில் நிலவும் ஆபத்து நிலையைக் கருத்திற்கொண்டு, வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய,
பதுளை, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட 'அவதானம்' எச்சரிக்கையும் அவ்வாறே செயற்படுத்தப்படும்.
இதற்கு மேலதிகமாக, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட 'விழிப்புடன் இருங்கள்' என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இலங்கையின் 04 மாவட்டங்கள் அதிஅபாயத்தில் - பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை கண்டி, கேகாலை குருநாகல், மாத்தளை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் இந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளில் நேற்று மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது குறித்து மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார். குறித்த பகுதிகளில் நிலவும் ஆபத்து நிலையைக் கருத்திற்கொண்டு, வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய, பதுளை, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட 'அவதானம்' எச்சரிக்கையும் அவ்வாறே செயற்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட 'விழிப்புடன் இருங்கள்' என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக வசந்த சேனாதீர தெரிவித்தார்.