• Feb 10 2026

யாழ் மாநகரத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

dileesiya / Dec 12th 2025, 3:39 pm
image

யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவு முகாமைத்துவம் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகரசபையினருக்கும் - யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பிரதிநிதிகளுக்கும் இடையில்  மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்வர் கௌரவ மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாநகரத்தின் கழிவு முகாமைத்துவம் மற்றும் பொதுப்பாதுகாப்பு தொடர்பாக கனடாவின் ரொரன்டோ நகரத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான கூட்டு முயற்சி குறித்தும், அதன் திட்டங்கள் தொடர்பிலும் மாநகரசபை பிரதிநிதிகளுக்கு மருத்துவபீட பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

மேற்படி திட்டம் தொடர்பில் உறுப்பினர்களுக்கு முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான சபை அங்கீகாரம் விரைந்து பெற்றுக் கொடுக்கப்படும் சந்தரப்பத்தில் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளில் இருந்து திட்டங்களை தொடங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பில் மாதாந்த பொதுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.

மேலும் மாநகரத்தின் நன்மை சார்ந்து பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளமைக்கு மாநகரசபை சார்பில் முதல்வர் மருத்துவபீட பிரதிநிதிகளுக்கும், இத் திட்டத்தை முன்வைத்துள்ள ரொரன்டோ மாநகரத்திற்கும் விசேடமாக நன்றி தெரிவித்தார்.

மேற்படி விசேட கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாநகர பிரதி முதல்வர், உறுப்பினர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் வைத்தியர் ஆர்.சுரேந்திரகுமாரன் மற்றும் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் வைத்தியர் எஸ்.ரவிராஜ், திட்ட முகாமையாளர் வைத்தியர் பி.ஏ.டினேஸ் கூஞ்ஞ, மாநகர ஆணையாளர், மாநகர பிரதம பொறியியலாளர், செயலாளர் மற்றும் மாநகர – மருத்துவபீட துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



யாழ் மாநகரத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாநகரசபையின் கழிவு முகாமைத்துவம் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகரசபையினருக்கும் - யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பிரதிநிதிகளுக்கும் இடையில்  மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.முதல்வர் கௌரவ மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாநகரத்தின் கழிவு முகாமைத்துவம் மற்றும் பொதுப்பாதுகாப்பு தொடர்பாக கனடாவின் ரொரன்டோ நகரத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான கூட்டு முயற்சி குறித்தும், அதன் திட்டங்கள் தொடர்பிலும் மாநகரசபை பிரதிநிதிகளுக்கு மருத்துவபீட பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.மேற்படி திட்டம் தொடர்பில் உறுப்பினர்களுக்கு முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான சபை அங்கீகாரம் விரைந்து பெற்றுக் கொடுக்கப்படும் சந்தரப்பத்தில் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளில் இருந்து திட்டங்களை தொடங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மாதாந்த பொதுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.மேலும் மாநகரத்தின் நன்மை சார்ந்து பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளமைக்கு மாநகரசபை சார்பில் முதல்வர் மருத்துவபீட பிரதிநிதிகளுக்கும், இத் திட்டத்தை முன்வைத்துள்ள ரொரன்டோ மாநகரத்திற்கும் விசேடமாக நன்றி தெரிவித்தார்.மேற்படி விசேட கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாநகர பிரதி முதல்வர், உறுப்பினர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் வைத்தியர் ஆர்.சுரேந்திரகுமாரன் மற்றும் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் வைத்தியர் எஸ்.ரவிராஜ், திட்ட முகாமையாளர் வைத்தியர் பி.ஏ.டினேஸ் கூஞ்ஞ, மாநகர ஆணையாளர், மாநகர பிரதம பொறியியலாளர், செயலாளர் மற்றும் மாநகர – மருத்துவபீட துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement