• Jan 19 2026

திருமலையில் வீதியோரத்தில் பெண் சடலமாக மீட்பு! பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்

Chithra / Dec 12th 2025, 4:48 pm
image


திருகோணமலை - சலப்பையாறு பகுதியில் வீதியோரத்தில் வயோதிப பெண்ணின் சடலம் இன்று (12)  மீட்கப்பட்டுள்ளது.


குச்சவெளி - சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய விஜயகுமாரி செல்வராஜா என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.  


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 


பக்கத்து வீட்டுக்கு சென்ற மனைவி வராதததால் கணவர் தேடிச்சென்றுள்ளார்.


இதன்போது குளிர் காரணமாக மனைவி போர்த்திச் சென்ற பெட்சீட் வீதி ஓரத்தில் இருந்ததாகவும், சற்று தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 


குறித்த இடத்தில் தடய பொருட்களாக கண்ணாடி துண்டுகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 


இந்நிலையில் இச் சம்பவம் விபத்தாக இருக்கலாம் எனவும்  விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 


இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


திருமலையில் வீதியோரத்தில் பெண் சடலமாக மீட்பு பொலிஸார் வெளியிட்ட சந்தேகம் திருகோணமலை - சலப்பையாறு பகுதியில் வீதியோரத்தில் வயோதிப பெண்ணின் சடலம் இன்று (12)  மீட்கப்பட்டுள்ளது.குச்சவெளி - சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய விஜயகுமாரி செல்வராஜா என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பக்கத்து வீட்டுக்கு சென்ற மனைவி வராதததால் கணவர் தேடிச்சென்றுள்ளார்.இதன்போது குளிர் காரணமாக மனைவி போர்த்திச் சென்ற பெட்சீட் வீதி ஓரத்தில் இருந்ததாகவும், சற்று தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த இடத்தில் தடய பொருட்களாக கண்ணாடி துண்டுகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இச் சம்பவம் விபத்தாக இருக்கலாம் எனவும்  விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement