• Dec 12 2025

மண்சரிவு அபாயம் - நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்குமாறு கோரிக்கை

Chithra / Dec 12th 2025, 12:51 pm
image


நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

மண்சரிவு அபாயம் - நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்குமாறு கோரிக்கை நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலை காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement