வட்டுவாகல் பாலத்தில் மீண்டும் சிறு உடைவு ஏற்பட்டதால் அச்சத்துடன் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் அவலநிலை உருவாகியுள்ளது.
டித்வா புயலால் பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்திருந்தது.
வட்டுவாகல் பாலம் உடைந்து நீர் பாய்ந்திருந்ததனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து சிலநாட்களுக்கு பின்னர் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்திற்கு விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வட்டுவாகல் பாலத்தின் நடுப்பகுதியால் நேற்று மீண்டும் சிறு உடைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் குறித்த வீதி தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்து இடம்பெறுகின்றது. எனவே அடிக்கடி குறித்த பாலம் உடைவுக்கு உள்ளாவதனால் பயணத்தில் ஈடுபடும் பயணிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் உடைந்த வட்டுவாகல் பாலம்; அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் வட்டுவாகல் பாலத்தில் மீண்டும் சிறு உடைவு ஏற்பட்டதால் அச்சத்துடன் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் அவலநிலை உருவாகியுள்ளது.டித்வா புயலால் பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்திருந்தது. வட்டுவாகல் பாலம் உடைந்து நீர் பாய்ந்திருந்ததனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து சிலநாட்களுக்கு பின்னர் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்திற்கு விடப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த வட்டுவாகல் பாலத்தின் நடுப்பகுதியால் நேற்று மீண்டும் சிறு உடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் குறித்த வீதி தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்து இடம்பெறுகின்றது. எனவே அடிக்கடி குறித்த பாலம் உடைவுக்கு உள்ளாவதனால் பயணத்தில் ஈடுபடும் பயணிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.