• Jan 15 2025

ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட சீனப் பெண்

Chithra / Dec 9th 2024, 8:08 am
image

 புகையிரத வாயிலில்  தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பர், தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயிலில் தொங்கிய நிலையில் மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலிலிருந்து தூக்கி வீசப்படுவதை அந்த வீடியோ பதிவில் காணக்கூடியதாகவுள்ளது.

தூக்கி வீசி எறியப்பட்ட குறித்த பெண் புதரில் விழுந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மலையக பிரதான ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.


ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட சீனப் பெண்  புகையிரத வாயிலில்  தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பர், தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.இச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ரயிலில் தொங்கிய நிலையில் மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் ரயிலிலிருந்து தூக்கி வீசப்படுவதை அந்த வீடியோ பதிவில் காணக்கூடியதாகவுள்ளது.தூக்கி வீசி எறியப்பட்ட குறித்த பெண் புதரில் விழுந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில் மலையக பிரதான ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement