• Jan 15 2025

பன்றி இறைச்சியை கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்!

Chithra / Dec 9th 2024, 8:17 am
image

 

சந்தையில் தற்போது ஆரோக்கியமான பன்றிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.  

ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். 

இந்நிலையில், குறித்த ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்மைய, கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

பன்றி இறைச்சியை கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்  சந்தையில் தற்போது ஆரோக்கியமான பன்றிகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.  ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், குறித்த ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்மைய, கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement