மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு இதனை தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மூலதன செலவுகளுக்காக 1,400 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது நாட்டின் வரலாற்றில் மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை, இதனை சரியான முறையில் செலவிட வேண்டியது அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த வருடத்தில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, மூலதனச் செலவினங்கள் மூலம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தவறான நிர்வாக முடிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு இதனை தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மூலதன செலவுகளுக்காக 1,400 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை, இதனை சரியான முறையில் செலவிட வேண்டியது அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்த வருடத்தில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, மூலதனச் செலவினங்கள் மூலம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தவறான நிர்வாக முடிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.