இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆனந்த விஜயபால தரையை முத்தமிட்டதாக போலியான தகவல் வெளியாகியுள்ளது.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர்.
குறித்த குழுவினரின் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தோனேஷியா பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது.
குறித்த விழாவில் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் கலந்து கொண்டார்.
இதன்போது அமைச்சர் ஆனந்த விஜயபால தரையை முத்தமிட்டதாக சமூக வலைத்தள பக்கங்களில் போலியான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வெளியாகும் போலி புகைப்படங்களையும், பொய்ச் செய்திகளையும் அமைச்சு மறுத்துள்ளது.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தோனேசிய பாராட்டு விழா; ஆனந்த விஜயபால தரையை முத்தமிட்டாரா இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆனந்த விஜயபால தரையை முத்தமிட்டதாக போலியான தகவல் வெளியாகியுள்ளது.கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். குறித்த குழுவினரின் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தோனேஷியா பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. குறித்த விழாவில் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் கலந்து கொண்டார். இதன்போது அமைச்சர் ஆனந்த விஜயபால தரையை முத்தமிட்டதாக சமூக வலைத்தள பக்கங்களில் போலியான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் வெளியாகும் போலி புகைப்படங்களையும், பொய்ச் செய்திகளையும் அமைச்சு மறுத்துள்ளது. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.