100 லீட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகள் திறக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்கள் நாட்டின் தினசரி பால் உற்பத்தி சுமார் ஒரு மில்லியன் லீட்டராக உள்ளது. அதை மூன்று மில்லியனாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்.
பால் உற்பத்தியின் மதிப்பை அதிகரிக்க மத்திய மையங்களை கட்டி வருகிறோம்.
அந்த திட்டத்தை நாங்கள் அனுராதபுரத்தில் இருந்து தொடங்குவோம். அதன் மூலம் பால் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குவோம்.
நூறு லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
நல்ல இனப்பெருக்க பண்ணைகளைத் தொடங்கி விவசாயிகளுக்கு நல்ல தாய் விலங்குகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
அரசின் தலையீடு மூலம் முட்டைகளை உற்பத்தி செய்யும் சிறிய பண்ணைகளுக்கு மானிய விலையில் சோளத்தை வழங்கவும் பணியாற்றி வருகிறோம்.
வைரஸ் காரணமாக அழிக்கப்பட்ட பன்றித் தொழிலை புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகள் திறக்கப்படும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப, நிதி உதவி- பிரதி அமைச்சர் அறிவிப்பு 100 லீட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகள் திறக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.நேற்று பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,எங்கள் நாட்டின் தினசரி பால் உற்பத்தி சுமார் ஒரு மில்லியன் லீட்டராக உள்ளது. அதை மூன்று மில்லியனாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்.பால் உற்பத்தியின் மதிப்பை அதிகரிக்க மத்திய மையங்களை கட்டி வருகிறோம்.அந்த திட்டத்தை நாங்கள் அனுராதபுரத்தில் இருந்து தொடங்குவோம். அதன் மூலம் பால் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குவோம். நூறு லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். நல்ல இனப்பெருக்க பண்ணைகளைத் தொடங்கி விவசாயிகளுக்கு நல்ல தாய் விலங்குகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.அரசின் தலையீடு மூலம் முட்டைகளை உற்பத்தி செய்யும் சிறிய பண்ணைகளுக்கு மானிய விலையில் சோளத்தை வழங்கவும் பணியாற்றி வருகிறோம்.வைரஸ் காரணமாக அழிக்கப்பட்ட பன்றித் தொழிலை புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.