கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.
அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் 'எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்' எனக் கேட்டுள்ளார்.
அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் எனவும் முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் 12 ஆம் திகதி இந்தியா அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் பயணித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களில் மருத்துவ மாணவர்களின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
உலகையே அதிரவைத்த இந்த விபத்தில் 260 பேர் பலியாகியதுடன் பலர் படுகாயமடைந்து பாரிய பொருட் சேதமும் ஏற்பட்டது.
குறித்த விமான விபத்துக்கான காரணத்தை அறியாது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது முதல் அறிக்கை வெளியாகியுள்ளது.
உலகையே உலுக்கிய விமான விபத்துக்கான காரணம் முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் 'எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் எனவும் முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் 12 ஆம் திகதி இந்தியா அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் பயணித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 30 நிமிடங்களில் மருத்துவ மாணவர்களின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.உலகையே அதிரவைத்த இந்த விபத்தில் 260 பேர் பலியாகியதுடன் பலர் படுகாயமடைந்து பாரிய பொருட் சேதமும் ஏற்பட்டது. குறித்த விமான விபத்துக்கான காரணத்தை அறியாது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது முதல் அறிக்கை வெளியாகியுள்ளது.