• Aug 31 2025

நாடுகடத்தப்பட்ட குற்றக்குழுவை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க திட்டம்

Chithra / Aug 31st 2025, 2:22 pm
image


இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட  5 சந்தேகநபர்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணையை மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்படவுள்ளது. 

நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக கெஹெல்பத்தர பத்மே என்ற பத்மசிறி பெரேராவுக்கு எதிராக, மனித கொலை, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், காவல்துறை உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தியமை மற்றும் புதுக்கடை நீதிமன்றில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குத் திட்டமிட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் ஆட்கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், கொள்ளை, கப்பல் கோரல், திட்டமிடப்பட்ட கொலை சம்பவங்கள், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடுகடத்தப்பட்ட குற்றக்குழுவை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க திட்டம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட  5 சந்தேகநபர்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணையை மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்படவுள்ளது. நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கெஹெல்பத்தர பத்மே என்ற பத்மசிறி பெரேராவுக்கு எதிராக, மனித கொலை, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், காவல்துறை உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தியமை மற்றும் புதுக்கடை நீதிமன்றில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குத் திட்டமிட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.அதேநேரம், ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் ஆட்கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், கொள்ளை, கப்பல் கோரல், திட்டமிடப்பட்ட கொலை சம்பவங்கள், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement