• Sep 01 2025

தந்தையை பிரிந்திருந்த 16 வயது மாணவி உயிர்மாய்ப்பு..!

Aathira / Aug 31st 2025, 10:03 pm
image

யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். 

இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.

கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டியுள்ளார். 

அதன்பின் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  

தந்தையை பிரிந்திருந்த 16 வயது மாணவி உயிர்மாய்ப்பு. யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டியுள்ளார். அதன்பின் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  

Advertisement

Advertisement

Advertisement