• Aug 31 2025

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு நபர் - வெளியான புதிய தகவல்!

Chithra / Aug 31st 2025, 1:44 pm
image


பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு சந்தேக நபர் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று இதனை தெரிவித்துள்ளனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களை தவிர்த்து புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதவானிடம் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு நபர் - வெளியான புதிய தகவல் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு சந்தேக நபர் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று இதனை தெரிவித்துள்ளனர்.“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களை தவிர்த்து புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதவானிடம் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement