• Sep 01 2025

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் கைது.!

Aathira / Aug 31st 2025, 8:38 pm
image

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வென்னப்புவ - வெவா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த தாக்குதலை நடத்தியவர்கள்,  மோட்டார் சைக்கிளை மோதி, கூர்மையான ஆயுதங்களால் சவாரி செய்தவர்களை தாக்கி, 

அதன்பின் துப்பாக்கிச் சூடு  நடத்தியதோடு வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த தாக்குதலில் காயம் அடைந்த  நபர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள், மோட்டார் வாகனம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் 

சந்தேக நபர் வென்னப்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் செப்டம்பர் 9ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்ட  நீதிமன்ற வழக்குடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் கைது. வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ - வெவா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை நடத்தியவர்கள்,  மோட்டார் சைக்கிளை மோதி, கூர்மையான ஆயுதங்களால் சவாரி செய்தவர்களை தாக்கி, அதன்பின் துப்பாக்கிச் சூடு  நடத்தியதோடு வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் காயம் அடைந்த  நபர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள், மோட்டார் வாகனம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் சந்தேக நபர் வென்னப்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் செப்டம்பர் 9ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்ட  நீதிமன்ற வழக்குடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement