• Sep 01 2025

வென்னப்புவ துப்பாக்கி சூட்டு சம்பவம்; வெளியான காணொளி காட்சிகள்

Aathira / Aug 31st 2025, 7:31 pm
image

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின் குற்றாவளிகள் தப்பிச் சென்ற காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தை அண்மித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் சுட்டும் வெட்டியும் கொலை  செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மேல் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து வௌியேறும் சந்தர்ப்பத்தில்,

காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிச் சென்ற காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வென்னப்புவ துப்பாக்கி சூட்டு சம்பவம்; வெளியான காணொளி காட்சிகள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின் குற்றாவளிகள் தப்பிச் சென்ற காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளன.வென்னப்புவ பொலிஸ் நிலையத்தை அண்மித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் சுட்டும் வெட்டியும் கொலை  செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் மேல் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து வௌியேறும் சந்தர்ப்பத்தில்,காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் தற்போது வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிச் சென்ற காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement