• Aug 31 2025

200 ஐ தாண்டிய எலும்புக்கூடுகள்; செம்மணியில் இன்று மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்

Chithra / Aug 31st 2025, 2:07 pm
image

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம்  39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, நேற்றையதினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 ஐ தாண்டிய எலும்புக்கூடுகள்; செம்மணியில் இன்று மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம்  39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, நேற்றையதினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement