• Aug 31 2025

கல்வியங்காட்டில் இன்று கையெழுத்து வேட்டை

Chithra / Aug 31st 2025, 4:15 pm
image


வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இக் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


கல்வியங்காட்டில் இன்று கையெழுத்து வேட்டை வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இக் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement