மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெர்வித்துள்ளார்.
மேலும் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மது பரிசோதனை கருவிகளும் சிறிதளவே இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் கார் விபத்து குறித்தும், அவரது பரிசோதனையில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அமைச்சரிடம் வினவிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால், பொலிஸாரால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அண்மையில் விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஜீப் ரக வாகனம் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில், வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை - பாதுகாப்பு அமைச்சர் தகவல் மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெர்வித்துள்ளார். மேலும் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மது பரிசோதனை கருவிகளும் சிறிதளவே இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் கார் விபத்து குறித்தும், அவரது பரிசோதனையில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அமைச்சரிடம் வினவிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால், பொலிஸாரால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, அண்மையில் விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஜீப் ரக வாகனம் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில், வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.