• Dec 17 2025

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

Chithra / Dec 16th 2025, 1:18 pm
image

 

நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியதுடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


இதேவேளை, 573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இல. 23 (அ) (1) பிரிவின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடையதாக இந்த கைது இடம்பெற்றிருந்தது.


 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை  நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியதுடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.இதேவேளை, 573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இல. 23 (அ) (1) பிரிவின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடையதாக இந்த கைது இடம்பெற்றிருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement