போலியான அனுமதிப்பத்திரம் தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களை சாவகச்சேரி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்
மாங்குளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் சாவகச்சேரி பகுதியில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.
சோதனைக்குள், உண்மையான அனுமதிப்பத்திரமின்றி, போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணல் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, டிப்பர் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போலி அனுமதிப்பத்திரம்: மணல் கடத்திய 2 டிப்பர்கள் சாவகச்சேரியில் கைது போலியான அனுமதிப்பத்திரம் தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களை சாவகச்சேரி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்மாங்குளம் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் சாவகச்சேரி பகுதியில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. சோதனைக்குள், உண்மையான அனுமதிப்பத்திரமின்றி, போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணல் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, டிப்பர் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.