• Jul 14 2025

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்!

Chithra / Jul 13th 2025, 3:58 pm
image

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெஹல்பத்தர பத்மே, உள்ளிட்ட மூவரும் கடந் 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர், இலங்கை பொலிஸாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை(14) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கெஹல்பத்தர பத்மே, உள்ளிட்ட மூவரும் கடந் 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.பின்னர், இலங்கை பொலிஸாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.எனினும் அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை(14) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement