சைப்ரஸில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை நிக்கோசியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான வசந்தா வஜிரானி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கார் எதிரே வந்த லொறியில் மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பெண்ணை உடனடியாக மீட்டு நிக்கோசியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான லொறியின் சாரதி நீதிமன்ற உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நிக்கோசியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியில் மோதி விபத்துக்குள்ளான கார்; வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை பெண் சைப்ரஸில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த செவ்வாய்கிழமை நிக்கோசியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான வசந்தா வஜிரானி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் கார் எதிரே வந்த லொறியில் மோதுண்டு விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்துக்குள்ளான பெண்ணை உடனடியாக மீட்டு நிக்கோசியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.27 வயதான லொறியின் சாரதி நீதிமன்ற உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பில் நிக்கோசியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.